AI பயமா? இதை மட்டும் படிச்சா போதும்! Students-க்கு 2026 Guide

வணக்கம் நண்பர்களே! 👋

நான் உங்கள் Mmani.in-ல இருந்து மணி பேசுகிறேன்.

"AI யா? அது Face Swap பண்ணும், Scam பண்ணும்!" - இப்படி நெனச்சிட்டு இருக்கீங்களா?

நானும் முதல்ல இப்படித்தான் நினைச்சேன். ஆனா உண்மை வேற மாதிரி இருக்கு. AI உன் Enemy இல்ல - சரியா use பண்ணா உன் நண்பன் & உன் Best Study Partner!

இந்த Post முழுசா படிச்சா AI பத்தி உன் பயம் போயிடும், guaranteed! 💪

💻 Laptop Slow-ஆ இருக்கா? AI Use பண்றதுக்கு முன்னாடி Fix பண்ணுங்க!

Slow Laptop-ல AI use பண்றது frustrating! 5 Free Settings மட்டும் மாத்தினா Rocket மாதிரி Fast ஆகும்:

👉 Laptop Speed Up பண்றது எப்படி - Tamil Guide 2026

AI என்றால் என்ன? - Simple-ஆ புரிஞ்சுக்கோ

AI (Artificial Intelligence) என்பது Computer-க்கு மனுஷன் மாதிரி யோசிக்க, பேச, படிக்க கத்துக்கொடுக்கற Technology.

உதாரணம்:

  • Google-ல Search பண்ணும்போது Auto suggestion வருதா? - அது AI
  • YouTube-ல நீ பாத்த video மாதிரி Next video recommend ஆகுதா? - அது AI
  • Swiggy-ல உன் favourite food suggest ஆகுதா? - அதுவும் AI தான்!

AI already உன் daily life-ல் இருக்கு - நீ notice பண்ணல அவ்வளவுதான்! 😄

AI Scams - Reality என்ன?

⚠️ இது ரொம்ப important section கண்டிப்பா படிங்க!

Scam பண்றது AI இல்ல - Scam பண்ற மனுஷங்கதான் AI-ஐ தப்பா use பண்றாங்க!

உதாரணம்:

  • கத்திய வச்சு சமையலும் செய்யலாம், இல்லனா கத்திய தப்பான வழியிலும் use பண்ணலாம் உதாரணத்துக்கு police case ஆகற மாரி! (சில வார்த்தைகளை நான் இங்க use பண்ண முடியாது நீங்களா புரிச்சுக்கோங்க) - இங்க அந்த கத்தி மேல ஏந்த தப்பும் இல்ல கத்திய use பண்ண அந்த மனிதர்கள் மேலே தான் தப்பு இருக்கு அதே மாதிரிதான் AI!

⚠️ Common AI Scams - Aware ஆகு:

📱 Scroll to see full table →

Scam Typeஎப்படி நடக்கும்எப்படி தப்பிக்கிறது
Face Swapஉன் photo வச்சு fake videoUnknown persons-ku photos அனுப்பாதே
Voice Cloneஉன் voice copy பண்ணி relatives-கிட்ட பணம் கேப்பாங்கCall பண்ணி verify பண்ணு
Fake AI AppsData திருடும் appsOfficial stores மட்டும் download பண்ணு

Mani Note: "FREE" nu வந்தா நீதான் da PRODUCT. So always VERIFY பண்ணிட்டு USE பண்ணு.

Top 5 AI Tools - உனக்கு எது Best?

📝 அன்பான மாணவர்களே, உங்கள் படிப்புக்கு உதவும் 5 சிறந்த இலவச AI Tools இதோ!

🤖 1. ChatGPT (OpenAI)

என்ன செய்யும்: எந்த கேள்வி கேட்டாலும் answer தரும், essay எழுதும், code பண்ணும்
Students-ku use: Assignment ideas, essay writing help, doubt clear பண்ண
Free-ஆ கிடைக்குமா: ஆமா! Free version போதும் basic use-ku
My Rating: ⭐⭐⭐⭐⭐

👉 ChatGPT Official Website Visit

🤖 2. Claude (Anthropic)

என்ன செய்யும்: Long documents படிக்கும், detailed explanation தரும், creative writing-ல super!
Students-ku use: Notes summarize பண்ண, complex topics easy-ஆ புரிஞ்சுக்க, blog எழுத 😄
Free-ஆ கிடைக்குமா: ஆமா! claude.ai-ல free version இருக்கு
My Rating: ⭐⭐⭐⭐⭐

👉 Claude Official Website Visit

🤖 3. Perplexity AI

என்ன செய்யும்: Google மாதிரி search பண்ணும், ஆனா sources சொல்லி answer தரும்!
Students-ku use: Research பண்ண, current news தெரிஞ்சுக்க, fact check பண்ண
Free-ஆ கிடைக்குமா: ஆமா! perplexity.ai free
My Rating: ⭐⭐⭐

👉 Perplexity AI Official Website Visit

🤖 4. Meta AI

என்ன செய்யும்: WhatsApp, Instagram-லயே பேசலாம்! Separate app தேவையில்ல
Students-ku use: Quick doubts, image create பண்ண, WhatsApp-லயே use பண்ணலாம்
Free-ஆ கிடைக்குமா: 100% Free!
My Rating: ⭐⭐⭐

👉 Meta AI Official Website Visit

🤖 5. Google Gemini

என்ன செய்யும்: Google AI! Search, Gmail, Google Docs எல்லாத்தோடும் connect ஆகும். Images படிக்கும், questions-ku detailed answer தரும்!
Students-ku use: Google Docs-ல directly essay write பண்ண, YouTube videos summarize பண்ண, Google Search-லயே AI answer கிடைக்கும்!
Free-ஆ கிடைக்குமா: ஆமா! gemini.google.com-ல free. Plus Indian students-ku 1 year Gemini Pro free! 🎉
Special Feature: உன் Android phone-ல already இருக்கு - Google Assistant-ஐ replace பண்ணிருக்கு!
My Rating: ⭐⭐⭐⭐

👉 Google Gemini Official Website Visit

💡 முக்கிய குறிப்பு: அனைத்து AI Tools-ம் Free Plan-ல மட்டும் Start பண்ணுங்க. Credit Card, OTP தேவையில்லை. Google ID மட்டும் போதும். சந்தேகம் இருந்தால் கீழே Comment-ல கேளுங்க.

Human vs AI - யாரு Better?

📱 Scroll to see full table →

FeatureHumanAI
Creativity✅ Best🔸 Good
Speed❌ Slow✅ Super Fast
Emotions✅ இருக்கு❌ இல்ல
24/7 Available❌ இல்ல✅ Always
Common Sense✅ இருக்கு🔸 Limited
Mistakes🔸 Sometimes🔸 Sometimes

Mani Note: AI = Un Assistant. Human = Un Boss. ரெண்டையும் சேர்த்து யூஸ் பண்ண தான் டா கெத்து. AI-ஆ வேல வாங்க தெரியனும், அதுக்கு அடிமை ஆககூடாது.

Students AI-ஐ எப்படி Use பண்ணலாம்?

📚 படிப்பில:

  • Difficult concepts-ஐ simple-ஆ explain பண்ண சொல்லு
  • "Explain photosynthesis like I am 10 years old" - இப்படி கேளு
  • Exam preparation-ku important questions generate பண்ணு

✍️ Writing-ல:

  • Essay structure கேளு, ஆனா நீயே எழுது
  • Grammar check பண்ணு
  • Ideas generate பண்ணு

💡 Projects-ல:

  • Research topics suggest பண்ணு
  • Data analyze பண்ண help கேளு
  • Presentation ideas கேளு

📄 Resume Create பண்ண:

AI இப்போ உனக்கு Professional Resume கூட ready பண்ணித் தரும்! கடைல போய் 500 ரூபாய் கொடுக்க தேவையில்ல!

எப்படி பண்றது:

  • ChatGPT அல்லது Claude-ல போ
  • இப்படி கேளு 👇

"I am a fresher, completed B.Sc Computer Science. Create a professional resume for software developer job"

  • உன் details add பண்ணு - Name, Skills, Projects
  • Copy பண்ணி Word-ல paste பண்ணு, ready! ✅

Pro Tip: "Make it ATS friendly resume" னு கூட சொல்லு - Interview call வர chance அதிகமாகும்! 💪

💻 Code எழுத & Laptop Speed Up பண்ண:

Coding தெரியலையா? பரவாயில்ல! AI உனக்கு Code எழுதித் தரும்!

எப்படி பண்றது:

  • ChatGPT அல்லது Claude-ல போ
  • இப்படி கேளு 👇

"Write a Python code to calculate student marks and grade"

  • Code copy பண்ணி run பண்ணு!
  • "Explain this code line by line" னு கேட்டா புரியவும் வைக்கும்! ✅

உதாரணம்: College project-ku website வேணுமா? "Create a simple HTML website for my college project about environment" னு கேளு - 2 நிமிஷத்துல ready! 🔥

AI மட்டும் இல்ல, உன் Laptop-ஐயும் Fast-ஆ வச்சிருக்கணும்! Slow Laptop-ல AI use பண்றது frustrating-ஆ இருக்கும். அதுக்கு நான் ஏற்கனவே ஒரு detailed guide எழுதியிருக்கேன்:

இந்த Tips பண்ணிட்டு AI Tools use பண்ணா - Double Boost கிடைக்கும்! 🚀

⚠️ இதை மட்டும் பண்ணாத:

  • AI எழுதினத directly copy-paste பண்ணாத - இது cheating!
  • AI சொல்லுறத 100% believe பண்ணாத - verify பண்ணு
  • Personal details AI-கிட்ட share பண்ணாத

📱 Mobile Storage Full-ஆயிடுச்சா?

AI Apps Download பண்ண Phone-ல Space இல்லையா? Delete பண்ணாம 1TB Free-ஆ கிடைக்கும்:

👉 Mobile Storage Full Fix — 1TB Free Tamil Guide

⚠️ Disclaimer

இந்த Post-ல குறிப்பிடப்படும் AI Tools பற்றிய Reviews மற்றும் Ratings என்னுடைய personal experience மட்டுமே.

  • ChatGPT, Claude, Gemini, Meta AI, Perplexity - இவை எதுவும் இந்த Post-ஐ Sponsor செய்யவில்லை.
  • AI Tools-ன் Features மற்றும் Free limits எப்போதும் மாறலாம். Use பண்றதற்கு முன் official website verify பண்ணவும்.
  • AI-ஐ பயன்படுத்தி எடுக்கும் எந்த decision-க்கும் Mmani.in பொறுப்பேற்காது.

Last Updated: June 2026

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் - FAQ

Q1: AI use பண்றது cheating-ஆ?

இல்ல! Calculator use பண்றது cheating இல்லையே - அதே மாதிரி! ஆனா AI எழுதினத உன்னோடதுனு சொல்லாத, அது தான் cheating!

Q2: AI-ஐ நம்பலாமா?

70-80% நம்பலாம். Important decisions-ku always verify பண்ணு. AI-உம் mistake பண்ணும்!

Q3: Free AI போதுமா students-ku?

போதும்! ChatGPT free, Claude free, Perplexity free, Gemini free - இத எல்லாம் use பண்ணா enough!

Q4: AI future-ல jobs எடுத்துடுமா?

Boring, repetitive jobs போகும். Creative, emotional, leadership jobs போகாது. So இப்பவே AI கத்துக்கோ - future-ku ready ஆகு!

🪟 Windows 12 வருதா? AI Features என்னென்ன இருக்கு?

Future-க்கு Ready ஆகணும்னா Windows 12-ல் என்ன AI Features வருதுன்னு தெரிஞ்சுக்கோங்க:

👉 Windows 12 India Release Date + AI Features Tamil

முடிவுரை - உன் Choice உன் கையில்! 🔥

AI ஒரு Tool - Hammer மாதிரி!

Hammer வச்சு House கட்டலாம், அல்லது தப்பா use பண்ணலாம். Choice உன்னோடது!

Smart students AI-ஐ பாத்து பயப்படறது இல்ல - Use பண்றாங்க!

இன்னைக்கே Claude.ai அல்லது ChatGPT-ல் account create பண்ணு. உன் next exam doubt-ஐ கேளு. Difference நீயே feel பண்ணுவ! 💪

இந்த Post உங்களுக்கு useful-ஆ இருந்தா? - நீங்க எந்த AI use பண்றீங்க? - AI-ய வச்சு எப்படி Resume ready பண்றதுனு தனி Post வேணுமா? - இந்த 5 AI-கும் detailed தனி தனி Post வேணுமா? - மேலும் உங்கள் AI பத்தின பயம் அப்புறம் doubts-ஐ Comment-ல சொல்லுங்க நண்பர்களே!

இது போன்ற Tech Tips, AI Guides-க்கு Mmani.in Follow செய்யுங்க! Facebook & Twitter @MMANITECH பக்கத்திலும் இணைந்துகொள்ளுங்க! 🚀

4 Comments

Post a Comment

Post a Comment

Previous Post Next Post