Laptop Slow ஆக இருக்குதா? 2026 - ல Windows 11 Speed Up பன்ன இந்த 5 Settings ஐ மாத்துங்க

வணக்கம் நண்பர்களே! 👋

நான் உங்கள் Mmani.in-ல இருந்து மணி பேசுகிறேன்.

புதுசா Laptop வாங்கி 6 மாதம் கூட ஆகல. ஆனா இப்போவே Slow ஆக இருக்குதா? Boot ஆக நீண்ட நேரம் எடுக்குதா? Chrome-ல் 2 Tab open செய்தாலே Hang ஆகி "Not Responding" என்று வருதா?

பலரும் உடனே RAM upgrade அல்லது SSD மாற்ற கடைக்கு போறாங்க. 4000 முதல் 8000 ரூபாய் வரை செலவு செய்யவே தேவையில்ல.

Windows 11-ல உள்ள 5 Settings மட்டும் மாத்தன போதும். உங்க Laptop புதுசு போல Speed ஆகிவிடும். இது என்னுடைய 4GB RAM Laptop-ல Test செஞ்ச போது நல்ல Result குடுத்த Tricks தான்.

🪟 Windows 12 வருதா? உங்க Laptop-க்கு Free Upgrade கிடைக்குமா?

India Release Date, Features, யாருக்கு Free Upgrade — எல்லாம் Tamil-ல் தெரிஞ்சுக்கோங்க:

👉 Windows 12 India Release Date + Features Tamil

1. Startup Apps Disable செய்யுங்க

Laptop slow boot problem-க்கு முக்கிய காரணம் இது தான். Laptop ON பண்ணும் போதே WhatsApp, Teams, Spotify, OneDrive என 15 முதல் 20 Apps தானாக Background-ல Open ஆகிவிடும். இதனால் CPU மற்றும் RAM Usage அதிகமாகி Laptop Slow ஆகிவிடும்.

1
Keyboard-ல Ctrl + Shift + Esc அழுத்துங்கள் — Task Manager open ஆகும்.
2
மேலே உள்ள Startup Tab-க்குள் போங்க.
3
Status என்ற Column-ல் Enabled என இருக்கும் Apps-ஐ பாருங்கள்.
4
தேவையில்லாத Apps-ஐ Right-click செய்து Disable செய்யுங்க.

💡 Mani Note: Windows Security, Audio Driver போன்ற System Apps-ஐ Disable செய்ய வேண்டாம். இதை செய்தால் Windows 11 startup speed கணிசமாக அதிகரிக்கும்.

2. Visual Effects-ஐ குறைங்க

Windows 11 Animation, Transparency Effects, Shadows பார்க்க அழகாக இருக்கும். ஆனா இவை GPU மற்றும் RAM-ஐ அதிகம் பயன்படுத்தும். குறிப்பாக 4GB RAM அல்லது i3 Processor உள்ள Laptops-ல் Performance Issue வரும்.

1
Windows + R அழுத்தி sysdm.cpl type செய்து Enter கொடுங்க.
2
System Properties Window open ஆகும் — Advanced Tab-க்குள் போங்க.
3
Performance பகுதியில் Settings பட்டனை அழுத்துங்க.
4
Adjust for best performance என்பதை select செய்து Apply கொடுங்க.

💡 Mani Note: இதற்கு பிறகு Windows கொஞ்சம் பழைய Style-க்கு மாறும். ஆனா Speed நன்றாக அதிகரிக்கும். Computer lag fix ஆக இது சிறந்த Method.

3. Storage Sense ON செய்யுங்க

C Drive Full ஆனாலும் Laptop slow ஆகும். Temp Files, Cache Files, Recycle Bin Files தேங்கி Disk Space நிரம்பிவிடும். Disk Usage 100% ஆனால் System முழுவதும் Hang ஆகும்.

1
Windows + I அழுத்துங்க — Settings-க்கு போங்க.
2
System > Storage-க்குள் போங்க.
3
Storage Sense என்பதை ON செய்யுங்க.
4
Run Storage Sense என்பதை Every week என set செய்யுங்க.

💡 Mani Note: இதனால் வாரம் ஒருமுறை தேவையில்லாத Files தானாக Delete ஆகும். PC cleanup automatic-ஆக நடக்கும். C drive full problem solution-க்கு இது நல்ல தீர்வு.

📱 Mobile Storage-உம் Full ஆயிடுச்சா?

Laptop மட்டுமில்ல — Phone Storage-உம் Free பண்ணலாம்! Delete பண்ணாம 1TB Free-ஆ கிடைக்கும்:

👉 Mobile Storage Full Fix — 1TB Free Tamil Guide

4. Power Plan-ஐ High Performance-ஆக மாத்துங்க

பல Laptops-ல Default-ஆக Balanced Power Plan தான் இருக்கும். இது Battery சேமிக்க CPU Speed-ஐ குறைத்து வச்சிருக்கும். Laptop-ஐ Charger-ல வைத்து பயன்படுத்தும் போது High Performance Mode-க்கு மாற்றினால் CPU முழு Speed-ல Run ஆகும்.

1
Windows + I அழுத்துங்க — Settings open ஆகும்.
2
System > Power & battery click செய்யுங்க.
3
Power mode என்ற இடத்தில் Best performance select செய்யுங்க.
⚠️ குறிப்பு: இதை செய்தால் Battery சீக்கிரம் தீரும். எனவே Charger-ல இருக்கும் போது மட்டும் பயன்படுத்துங்க. Laptop வேகமாக இயங்கும். CPU Throttling நிற்கும்.

5. Background Apps-ஐ Off செய்யுங்க

Windows 11-ல பல Apps நாம் யூஸ் பண்ணாத போதும் Background-ல இயங்கி RAM மற்றும் Internet Data-ஐ எடுத்துக்கொள்ளும். Calculator, Weather, Mail போன்ற Apps-க்கு Background அனுமதி தேவையில்லை.

1
Settings > Apps > Installed apps-க்குள் போங்க.
2
ஒவ்வொரு App-ஆக 3 Dots-ஐ click செய்து Advanced options-க்குள் செல்லுங்க.
3
Background apps permissions என்பதை Never என மாத்துங்க.

💡 Mani Note: முக்கியமான Apps-ஆன WhatsApp, Mail-க்கு மட்டும் Power optimized வைத்துக்கொள்ளுங்கள்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் ❓

Q1: இந்த Settings மாற்றினால் Laptop-க்கு எதாவது பிரச்சனை வருமா?

இல்லை. இவை அனைத்தும் Microsoft கொடுத்துள்ள அதிகாரப்பூர்வ Settings தான். எந்த Data-உம் அழியாது. 100% Safe. Official source கீழே பாருங்க:

🌐 Microsoft Official — Windows 11 Performance Tips

Microsoft-ஓட Official PC Performance Guide — 100% Safe, Verified.

👉 Microsoft Official Support Page

Q2: எனது Laptop 2GB RAM தான். இது Work ஆகுமா?

2GB RAM-க்கு Trick 1, 2, 3 கண்டிப்பாக Work ஆகும். Speed Difference நன்றாக தெரியும்.

Q3: எத்தனை நாட்களுக்கு ஒருமுறை இதை செய்ய வேண்டும்?

ஒருமுறை Settings மாற்றினால் போதும். Storage Sense மட்டும் Automatic-ஆக வேலை செய்யும்.

⚡ Speed-up பண்ணிட்டு என்ன பண்ணலாம்?

Laptop இப்போ Rocket மாதிரி Fast ஆயிடுச்சு. இந்த Speed-ஐ வச்சு 5 Free AI Tools Use பண்ணி Assignment, Notes எல்லாம் 10 நிமிஷத்துல முடிச்சுடலாம். Student-ஆ இருந்தா இந்த Guide தவற விடாதீங்க.

🤖 மாணவர்களுக்கான Free AI Tools Guide

5 Free AI Tools Use பண்ணி Assignment, Notes எல்லாம் 10 நிமிஷத்துல முடிச்சுடலாம்!

👉 மாணவர்களுக்கான Free AI Tools Guide இங்கே படிங்க

💻 புதுசா Laptop வாங்க Plan பண்றீங்களா?

Speed Tricks பண்ணியும் போதலன்னா புதுசு வாங்கணும். ஆனா இந்த 7 தவறு பண்ணாதீங்க — ₹50,000 Waste ஆகாம Smart-ஆ வாங்குங்க:

👉 Laptop வாங்கும் முன் 7 தவறு — Tamil Guide 2026

⚠️ முக்கியமான சட்டரீதியான குறிப்பு / Legal Disclaimer

1. தகவல் நேரம்: இந்த Post-ல உள்ள Windows 11 Settings Tips — June 2026 வரை உள்ள தகவல் தான். Microsoft Updates வந்தால் Steps மாறலாம் — Official Site-ல Confirm பண்ணுங்க.

2. இது Professional Advice அல்ல: இவை General Tips மட்டுமே. Hardware Problem இருந்தால் Authorized Service Center-ஐ அணுகவும்.

3. Confirm பண்ணுங்க: System Apps Disable பண்றதுக்கு முன் சரியான App-ஆ என்று Verify பண்ணுங்க.

4. பொறுப்பு துறப்பு: இந்த தகவலை வைத்து எடுக்கும் முடிவுக்கு mmani.in பொறுப்பல்ல.
Last Updated: June 2026 | Source: Microsoft Official + Personal Testing

முடிவுரை

மேல சொன்ன 5 Tricks-ஐ Step by Step-ஆக செஞ்சு பாருங்க. உங்கள் Laptop Speed கண்டிப்பா அதிகரிக்கும். Software வாங்கவோ, Hardware மாற்றவோ தேவையில்லை.

இந்த Tips உங்களுக்கு பயனுள்ளதாக இருந்ததா? Work ஆனதா? Comment-ல உங்கள் Laptop Model மற்றும் கிடைத்த Result-ஐ சொல்லுங்க.

இது போன்ற Daily Windows 11 Tips, PC Tricks, Tech News-க்கு Mmani.in Follow செய்யுங்க. நமது Facebook & Twitter @MMANITECH பக்கத்திலும் இணைந்து கொள்ளுங்கள்.

5 Comments

Post a Comment

Post a Comment

Previous Post Next Post